Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்

By: Karunakaran Thu, 10 Sept 2020 6:29:25 PM

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டறிந்தது.

இந்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற தடுப்பூசி, தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

cowi shield vaccine,test,xford university,india ,கோவிட் ஷீல்ட் தடுப்பூசி, சோதனை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இந்தியா

தற்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ரஷியாவின் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையில் 31 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

பல நாடுகள் பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வரும் நிலையில் அதன் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனையில் தடுப்பூசி போடப்பட்ட ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதால், இந்த தடுப்பூசி சோதனை அனைத்து நாடுகளிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|