Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு எதிராக போராடும் செல்வாக்குமிக்க தலைவர்களின் கொள்கைகள் மோசமாக உள்ளதாக விமர்சனம்

கொரோனாவுக்கு எதிராக போராடும் செல்வாக்குமிக்க தலைவர்களின் கொள்கைகள் மோசமாக உள்ளதாக விமர்சனம்

By: Karunakaran Fri, 24 July 2020 1:38:32 PM

கொரோனாவுக்கு எதிராக போராடும் செல்வாக்குமிக்க தலைவர்களின் கொள்கைகள் மோசமாக உள்ளதாக விமர்சனம்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இருப்பினும் கொரோனா குறைந்தபாடில்லை. இந்த கொரோனா சவால்களை உலக நாடுகளின் தலைவர்கள் எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பது உலகளவில் நிபுணர்களால் உற்று நோக்கப்படுகிறது.

ஜனநாயக நாடுகளான இந்தியாவில் நரேந்திர மோடி, அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன், பிரேசிலில் ஜெயிர் போல்சொனரோ, மெக்சிகோவில் ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்ரடார் ஆகியோர் தமது நாடுகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக உள்ளனர். இவர்களது ஆட்சி அதிகாரத்தில் உள்ள நாடுகள், கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

criticism,influential leaders,coronavirus,corona war ,விமர்சனம், செல்வாக்கு மிக்க தலைவர்கள், கொரோனா வைரஸ், கொரோனா போர்

ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பாவின் ஐஸ்லாந்து அல்லது தென்கொரியா, ஆசியாவின் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது, செல்வாக்குமிக்க தலைவர்களின் கொள்கைகள் மோசமாக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. செல்வாக்கு படைத்த தலைவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் நிபுணர்களையும், அறிவியலையும் அவமதிப்பவர்களாக உள்ளதாக ‘இன்டர் அமெரிக்கன் டயலாக்’கின் தலைவர் மைக்கேல் ஷிப்டர் கூறியுள்ளார்.

செல்வாக்கு படைத்த தலைவர்களுக்கு உண்மையில் பிரச்சினைகளை தீர்க்கிற அல்லது குறைந்தபட்சம் திறம்பட நிர்வகிக்க உதவுகிற அறிவார்ந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும், அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஆரம்பத்தில் கொரோனா தொற்றை குறைத்தாலும், அனைவரும் விஞ்ஞானிகள் மீது சந்தேகம் கொண்டனர். இந்தியாவில் பிரதமர் மோடி, ஊரடங்கிலும் பொது முடக்கத்திலும் தீவிரம் காட்டி கொரோனா வைரஸ் பிரச்சினையை தீவிரமாக எதிர்கொண்டதாக மைக்கேல் ஷிப்டர் தெரிவித்துள்ளார்.

Tags :