Advertisement

பீகாரில் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

By: Monisha Tue, 18 Aug 2020 11:25:53 AM

பீகாரில் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கின்றது. ஆனாலும், நோய்த்தொற்றை கட்டுக்குள் வைக்க ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்புகளின் தன்மைக்கேற்ப ஊரடங்கு மற்றும் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நோய் பாதிப்புகளை குறைக்கும் வகையில் பீகார் மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பீகாரில் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

corona virus,infection,curfew,bihar,transport ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,ஊரடங்கு,பீகார்,போக்குவரத்து

பீகாரில் நோய் பாதிப்பு குறித்த உயர்மட்ட கூட்டம் நடந்தது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் மீண்டும் ஊரங்கை நீட்டிக்க பீகார் அரசு விரும்புவதாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளின் கீழ் வரும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எந்தவொரு பொது போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது. பொருட்களின் போக்குவரத்து தவிர, கட்டுமான நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|