Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை,தென்காசியில் பரவலான மழையால் நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை,தென்காசியில் பரவலான மழையால் நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

By: Monisha Mon, 07 Dec 2020 3:30:02 PM

நெல்லை,தென்காசியில் பரவலான மழையால் நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 67.40 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 45 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 36.40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. இன்றும் நான்காவது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது.

நெல்லையில் அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 125.40 அடியாக உள்ளது. அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1584 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 138.78 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை.

nellai,rain,dam,farmer,happy ,நெல்லை,மழை,அணை,விவசாயி,மகிழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை நீடித்தது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்தது. விடிய விடிய பெய்த மழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பின. புளியங்குடியில் நாரணபேரி குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. சுமார் 100 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்ட அணைகளில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 81.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 233 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பொதுமக்கள் செல்ல தடை காரணமாக அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags :
|
|
|
|