Advertisement

தொடர் மழையால் ஆந்திராவில் அணைகள் நிரம்புகின்றன

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:09:49 AM

தொடர் மழையால் ஆந்திராவில் அணைகள் நிரம்புகின்றன

கனமழையால் ஆந்திராவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு அதிகளவு நீர்வரத்து கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. இதனால், கர்நுால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கு, வினாடிக்கு, 4.29 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து கிடைத்து வருகிறது.

அணையில், 200 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 5.65 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படுகிறது.

fills fast,dams,andhra,telangana ,வேகமாக நிரம்புகிறது, அணைகள், ஆந்திரா, தெலுங்கானா

இதேபோல, நெல்லுார் மாவட்டத்தில் உள்ள சோமஷீலா அணைக்கு, வினாடிக்கு, 22 ஆயிரத்து, 777 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் தற்போது, 74 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 27 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதே மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணைக்கு வினாடிக்கு, 8,127 கன அடி நீர்வரத்து உள்ளது; 55 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 3,320 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்டலேறுவில் இருந்து சாய்கங்கை கால்வாய் வழியாக, தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதுவரை, 1.50 டி.எம்.சி.,க்கு மேல் நீர் கிடைத்துள்ளது. கண்டலேறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னைக்கும் அதிகளவு நீர்வரத்து கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

Tags :
|
|