Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப் பின் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப் பின் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை

By: Karunakaran Tue, 14 July 2020 2:47:47 PM

அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப் பின் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை

அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாகாணத்தை சேர்ந்த டேனியல் லீ என்பவர் கடந்த 1999ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தற்போது கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பின், ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த மரண தண்டனையை நிறைவேற்ற, நேற்று நாள் குறிக்கப்பட்டிருந்தது. டேனியல் லீக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால், லீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்க்க வர முடியாது.

united states,death penalty,murder,17 year ,அமெரிக்கா, மரண தண்டனை, கொலை, 17 ஆண்டு

லீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தண்டனையை பார்க்க முடியாது என்ற காரணத்தை பயன்படுத்தி தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோர்ட்டை அணுகினர். அதன்படி, இண்டியானா மாகாணத்தின் தெற்கு மாவட்ட கோர்ட்டு மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு கோர்ட்டில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்தார். அதன்படி, கொலை குற்றவாளி லீக்கு மரண தண்டனை நிறைவேற்ற கோர்ட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|