Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

By: Nagaraj Wed, 09 Sept 2020 10:35:01 AM

அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு... அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 இனால் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்க எண்ணிக்கையால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ministry of education,students,university,co ,கல்வி அமைச்சு, மாணவர்கள், பல்கலைக்கழம், ஒன்றிணையும்

இதற்கு தேவையான பின்புல ஆற்றல் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் மருத்துவபீடங்களுடன் அரசாங்கத்தின் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பீடாதிபதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

கூடுதலான மாணவர்கள் அரச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு உள்வாங்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கூடுதலான மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியை வழங்குவதன் ஊடாக நாட்டின் மனித வளத்துடன் ஒன்றிணையும் எதிர்கால மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Tags :