Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பாக உள்நாட்டு எல்லைகளை திறக்க முடிவு

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பாக உள்நாட்டு எல்லைகளை திறக்க முடிவு

By: Nagaraj Sat, 14 Nov 2020 2:58:13 PM

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பாக உள்நாட்டு எல்லைகளை திறக்க முடிவு

உள்நாட்டு எல்லைகளை திறக்க முடிவு... எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பதாக அவுஸ்ரேலியா, மேற்கு மாநிலம் தவிர ஏனைய உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது.

எனினும், மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) வலியுறுத்தியுள்ளார்.

vaccine,christmas,boundaries,decision to open,staff,government ,தடுப்பூசி, கிறிஸ்துமஸ், எல்லைகள், திறக்க முடிவு, ஊழியர்கள், அரசாங்கம்

விக்டோரியா மாநிலத்தில் தொடர்ந்து 14 ஆவது நாளாக எவருக்கும் கொரோனாத் தொற்று அடையாளம் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, Covid-19 வைரஸ் தொற்றுத் தடுப்புமருந்து தொடர்பான தேசியக் கொள்கைக்கு அவுஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பு மருந்தை விநியோகிப்பதில் சில பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதும் அந்தத் திட்டத்தில் அடங்கும். அதன்படி, மூத்தவர்கள், முன்னிலை ஊழியர்கள் போன்றோருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|