Advertisement

மூன்று நாடுகளுக்கு சர்வதேச விமான சேவை இயக்க முடிவு

By: Nagaraj Sun, 19 July 2020 6:58:47 PM

மூன்று நாடுகளுக்கு சர்வதேச விமான சேவை இயக்க முடிவு

சில நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமான சேவை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு விமானச் சேவைகளை தொடங்குவதற்கு இந்திய அரசு அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நாடுகளில் உள்ள சில விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

international flight,service,foreigners,embassy officials ,சர்வதேச விமானம், சேவை, வெளிநாட்டவர்கள், தூதரக அதிகாரிகள்

அமெரிக்காவை சேர்ந்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனங்கள் பாதுகாப்பது நடவடிக்கைகளுடன் விமான சேவை இயக்க முடிவு செய்துள்ளது .பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளது. வழக்கமான கட்டணங்களை விட குறைவான கட்டணங்கள் தான் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளில் உள்ள சில விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனங்கள் பாதுகாப்பது நடவடிக்கைகளுடன் விமான சேவை இயக்க முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளது. வழக்கமான கட்டணங்களை விட குறைவான கட்டணங்கள் தான் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தூதரக அதிகாரிகள் போன்ற வெளிநாட்டவர்களும், இந்திய ஓவர்சீஸ் குடிமக்கள் அட்டை பெற்றவர்களும், இந்தியக் குடிமக்களும் இந்த விமானங்களில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள் பயணிப்பதற்கு போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :