Advertisement

தேவை குறைந்ததால் பூக்களின் விலை சரிவு

By: Monisha Sat, 21 Nov 2020 3:39:21 PM

தேவை குறைந்ததால் பூக்களின் விலை சரிவு

பவானிசாகர் மற்றும் அதன் அருகே உள்ள பகுத்தம்பாளையம், அக்கரைதத்தப்பள்ளி, கெஞ்சனூர், எரங்காட்டூர், கொத்தமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை, சம்பங்கி, முல்லை உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்துள்ளனர். நாள்தோறும் இப்பகுதியில் சுமார் 5 டன் பூக்கள் விளைகிறது.

இந்தப் பூக்களை வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கும் அனுப்புகின்றனர். பூக்களில் தேவைக்கேற்ப அதன் விலையில் நாள்தோறும் மாற்றம் ஏற்படுகிறது.

flowers,price,affordable,cultivation,sale ,பூக்கள்,விலை,மலிவு,சாகுபடி,விற்பனை

பவானிசாகர் பகுதியில் நேற்று மல்லிகைப்பூ ரூ.1,100-க்கும், முல்லைப்பூ ரூ.310-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும் வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.1,250-க்கும், முல்லைப்பூ ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை ஆனது.

பூக்களின் தேவை குறைந்ததால் நேற்று முன்தினத்தை விட நேற்று முல்லைப்பூ ரூ.400-ம், மல்லிகைப்பூ ரூ.150-ம், சம்பங்கி பூ ரூ.30-ம் விலை குறைந்திருந்தது.

Tags :
|