Advertisement

குறைந்து வரும் பவானிசாகர் அணை நீர் மட்டம்

By: Monisha Wed, 25 Nov 2020 4:13:08 PM

குறைந்து வரும் பவானிசாகர் அணை நீர் மட்டம்

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது.

erode,bhavanisagar dam,rain,drinking water,agriculture ,ஈரோடு,பவானிசாகர் அணை,மழை,குடிநீர்,விவசாயம்

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 95.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1140 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 50 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடி என மொத்தம் 2ஆயிரத்து 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags :
|
|