Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்

By: Monisha Tue, 10 Nov 2020 09:38:25 AM

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 88 ஆயிரத்து 338 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

15 ஆயிரத்து 259 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,385 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. வீடுகளில் 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

virudhunagar,corona virus,vulnerability,test,positive ,விருதுநகர்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பரிசோதனை,பாசிட்டிவ்

மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 16,452 ஆக உயர்ந்துள்ளது. 1,082 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 3,385 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை உள்ளது.

நெல்லை, விருதுநகர் மருத்துவ கல்லூரி பரிசோதனைகளை தவிர வேறு பரிசோதனை மையங்களுக்கு பரிசோதனை மாதிரிகளை அனுப்பி வைப்பதை மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தவிர்த்து விட்டது. இதனால் தான் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டு வருகிறது.

Tags :
|