Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அரை சதம் குவித்த தேவ்டட் படிக்கல்

முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அரை சதம் குவித்த தேவ்டட் படிக்கல்

By: Nagaraj Mon, 21 Sept 2020 9:35:32 PM

முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அரை சதம் குவித்த தேவ்டட் படிக்கல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தேவ்டட் படிக்கல் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது அவருக்கு முதல் ஐபிஎல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்டட் படிக்கல், ஆரான் பின்ச் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

devdut padikkal,first match,bangalore team,wicket ,தேவ்டட் படிக்கல், முதல் போட்டி, பெங்களூரு அணி, விக்கெட்

அதிலும் தேவ்டட் படிக்கல் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது அவருக்கு முதல் ஐபிஎல் போட்டியாகும். இதையடுத்து 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தேவ்கட் படிக்கல். தேவ்டட் படிக்கல் விக்கெட்டை இழந்த அடுத்த பந்திலேயே ஆரான் பின்ச் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த போது பெங்களூரு அணி 11.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை அடித்திருந்தது. இதையடுத்து, கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் சற்று நிதானம் காட்டி பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், இந்த பாட்னர்ஷிப் அதிரடிக்கு மாறுவதற்கு முன்பாக கோலி 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும், டி வில்லியர்ஸ் பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையளித்து வந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரியும், 2 ரன்களும் எடுக்க 29 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் டி வில்லியர்ஸ். ஐபிஎல் கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸுக்கு இது 34 அரைசதமாகும்.

ஆனால், அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற டி வில்லியர்ஸ் 2-வது ரன் எடுக்கும்போது ரன் அவுட் ஆனார். அவர் 30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, கடைசி 3 பந்துகளில் பெங்களூரு அணிக்கு 1 ரன் மட்டுமே கிடைத்தது. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணித் தரப்பில் நடராஜன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Tags :