Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேலில் இருந்து சவுதி வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம்

இஸ்ரேலில் இருந்து சவுதி வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம்

By: Karunakaran Mon, 31 Aug 2020 4:53:32 PM

இஸ்ரேலில் இருந்து சவுதி வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம்

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. மேலும், தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே கடந்த 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் இஸ்ரேலை தனி நாடகவும் ஏற்றுக்கொண்டது.

flight,israel,united arab emirates,saudi airspace ,விமானம், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி வான்வெளி

வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.இந்த ஒப்பந்தத்தில் ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் இருந்து பிரதமர் பெஞ்சமின் அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான எல் அல் விமானத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் சவுதி அரேபியாவில் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
|
|