Advertisement

இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை கண்டுபிடிப்பு

By: Nagaraj Tue, 03 Nov 2020 09:05:29 AM

இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை கண்டுபிடிப்பு

அரிய வகை அரணை கண்டுபிடிப்பு... வவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு சென்ற ஒருவர் Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை இனம் ஒன்றை மரத்தில் அவதானித்த நிலையில் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

rare species,fort,sri lanka,invention,trees ,அரிய வகை, அரணை, இலங்கை, கண்டுபிடிப்பு, மரங்கள்

இலங்கைக்கு மட்டுமே உரித்தான டசியா ஹலியானஸ் Dasia halianus எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவ அரணை இனம் வன்னிக் காடுகளில் இருந்து வந்துள்ள போதும், மிக அரிய வகை உயிரினமாகவே உள்ளது. பெரும்பாலும் மரங்களில் இவ் உயிரினம் வாழ்ந்து வருகின்றது.

நாட்டின் ஒரு அரியவகை உயிரினமாக இது இருப்பதானால் 1970 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் காணப்படுவதை அவதானிக்கலாம்.

தற்போது இந்த அரிய வகை அரணை இனத்தின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags :
|