Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Mon, 28 Sept 2020 09:16:00 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நீடித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று தாக்குதலுக்கு நேற்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 173
செங்கல்பட்டு - 2,358
சென்னை - 10,656
கோவை - 4,981
கடலூர் - 1,498
தர்மபுரி - 1,031
திண்டுக்கல் - 479
ஈரோடு - 1,074
கள்ளக்குறிச்சி - 511
காஞ்சிபுரம் - 944
கன்னியாகுமரி - 980
கரூர் - 486
கிருஷ்ணகிரி - 828
மதுரை - 738
நாகை - 573
நாமக்கல் - 1,021
நீலகிரி - 971
பெரம்பலூர் - 128
புதுக்கோட்டை - 741
ராமநாதபுரம் - 154
ராணிப்பேட்டை - 444
சேலம் - 2,807
சிவகங்கை - 268
தென்காசி - 467
தஞ்சாவூர் - 1,220
தேனி - 546
திருப்பத்தூர் - 575
திருவள்ளூர் - 1,596
திருவண்ணாமலை - 927
திருவாரூர் - 1,068
தூத்துக்குடி - 605
திருநெல்வேலி - 904
திருப்பூர் - 1,667
திருச்சி - 778
வேலூர் - 903
விழுப்புரம் - 1,003
விருதுநகர் - 263
விமானநிலைய கண்காணிப்பு -27
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :