Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை துவங்கிய தி.மு.க... 45 நாட்களில் 25 லட்சம் பேரை சேர்க்க திட்டம்

ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை துவங்கிய தி.மு.க... 45 நாட்களில் 25 லட்சம் பேரை சேர்க்க திட்டம்

By: Monisha Wed, 16 Sept 2020 3:30:48 PM

ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை துவங்கிய தி.மு.க... 45 நாட்களில் 25 லட்சம் பேரை சேர்க்க திட்டம்

தி.மு.க.வில் இதுவரை விண்ணப்ப படிவம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த உறுப்பினர் சேர்க்கையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

'எல்லோரும் நம்முடன்' என்ற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களில் குறைந்தது 25 லட்சம் புதிய ஆன்லைன் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை இப்பணிக்காக சந்திக்கிறார்கள்.

online,membership,dmk,mk stalin,website ,ஆன்லைன்,உறுப்பினர் சேர்க்கை,தி.மு.க,முக ஸ்டாலின்,இணையதளம்

18 வயது நிறைவடைந்தவர்கள் https://www.dmk.in/joindmk என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிந்து தி.மு.க. வில் உறுப்பினராக சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

ஆன்லைன் வழியாக உறுப்பினராக பதிவு செய்பவர்கள் உள்கட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற வேண்டுமானால் இணைய தளத்தில் பதிவு செய்த தகவல்களை உள்ளூர் கட்சி பிரதிநிதிகள் நேரில் சரி பார்ப்பார்கள்.

அதுமட்டுமின்றி ஆன்லைன் வழியாக சேருபவர்கள் உள்கட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்கு ஒரு ஆண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட ஆன்லைன் உறுப்பினர் 25 தகுதியான நபர்களை கட்சியில் உறுப்பினராக சேர்த்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
|
|