Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

By: Monisha Sat, 07 Nov 2020 1:51:45 PM

கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 66வது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டனர்.

திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை கமல் சந்தித்தார். அப்போது அவரை வாழ்த்தி ரசிகர்கள் முழக்கமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை கை கூப்பி ஏற்றுக்கொண்ட கமல், அவர்களுக்கும் தனது வாழ்த்துக்ளை தெரிவித்தார்.

mk stalin,kamal haasan,birthday,greetings,twitter ,மு.க.ஸ்டாலின்,கமல்ஹாசன்,பிறந்தநாள்,வாழ்த்து,டுவிட்டர்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞரால் 'கலைஞானி' என்று போற்றப்பட்ட - எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலமுடன் நீண்ட காலம் வாழ்க! என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :