Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி வரும் 24ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி வரும் 24ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

By: Nagaraj Thu, 22 Oct 2020 9:20:26 PM

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி வரும் 24ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

வரும் 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்... மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி வரும் 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில், அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக செப்டம்பர் மாதம் 15 அன்று நிறைவேற்றி, மாண்புமிகுதமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியும், அவர் அந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை.

Tags :