Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்தாண்டு தொடக்கம் வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம்; சுகாதார அமைப்பு தகவல்

அடுத்தாண்டு தொடக்கம் வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம்; சுகாதார அமைப்பு தகவல்

By: Nagaraj Fri, 24 July 2020 2:16:52 PM

அடுத்தாண்டு தொடக்கம் வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம்; சுகாதார அமைப்பு தகவல்

உலக சுகாதார அமைப்பு தகவல்... அடுத்த ஆண்டின் தொடக்கம் வரையில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம் என, உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் அவசர காலத் திட்டத்தின் தலைவர் மைக் ரியான், நோய்த் தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும், ஆனால் அவற்றின் பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

vaccine,next year,necessity,use,corona,exposure ,தடுப்பூசி, அடுத்தாண்டு, அவசியம், பயன்பாடு, கொரோனா, பாதிப்பு

பொருளாதாரத்தைச் சார்ந்து இல்லாமல் தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட கிட்டத்தட்ட 98 நாட்கள் ஆனது. அதிலிருந்து இரண்டு மில்லியனாக பாதிப்பு எண்ணிக்கை உயர சுமார் 43 நாள்கள் ஆனது. இதனையடுத்து, சுமார் 27 நாள்களில் 3 மில்லியன் பாதிப்பை அடைந்தது. அப்படியிருக்க , தற்போது நிமிடத்துக்கு 43 பேர் பாதிப்பு என 4 மில்லியன் எண்ணிக்கையை அடைய சுமார் 16 நாட்கள் மட்டுமே ஆனது என தகவல்கள் கூறுகின்றன.

Tags :
|
|