Advertisement

சீனாவின் கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுங்களா?

By: Nagaraj Thu, 20 Aug 2020 2:34:20 PM

சீனாவின் கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுங்களா?

தடுப்பூசி விலையை அறிவித்த சீனா... கொரோனா தடுப்பூசியின் விலை ரூ. 10,800 என்று சீனா அறிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு உலகின் பல நாடுகளும் மருந்து கண்டுபிடித்துள்ளன. ரஷ்யா ஏற்கெனவே மருந்து ஒன்றை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்து உற்பத்தியும் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவும் கொரோனா வைரசுக்கு Ad5-nCoV என்ற தடுப்பூசி மருந்து கண்டு பிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

vaccine,price,announcement,china,twice ,தடுப்பூசி, விலை, அறிவிப்பு, சீனா, இரண்டு முறை

இதுகுறித்து சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியூ ஜிங்ஷென் கூறுகையில் ''நகரப்பகுதிகளிலுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் போடப்படும். மக்கள் நெருக்கம் அதிகமில்லாத கிராமங்களில் இந்த ஊசி போட வேண்டுமென்ற தேவையில்லை.

நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனக்கும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். இதுவரை, எந்த பக்கவிளைவும் இல்லை. முதல் ஊசி செலுத்திக்கொண்ட பிறகு 28 நாள் கழித்து இன்னொரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ஊசி செலுத்தியதும் 97 சதவிகித பாதுகாப்பு கிடைத்து விடும். உடலில் ஆன்டிபாடிகள் அதிகரிக்கத் தொடங்கி விடும்.

இரண்டாவது முறையும் ஊசி போட்டுக் கொண்டால் 100 சதவிகித பாதுகாப்பு கிடைத்து விடும். விதி விலக்காக சிலருக்கு ஒரே சமயத்தில் இரண்டு கையிலும் சேர்ந்து இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் 4 மைக்ரோகிராம் மருந்து உடலுக்குள் செலுத்தப்படும். இரண்டும் சேர்த்து 1000 யுவான் (இந்திய மதிப்பில் 10,800) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசி சந்தைக்கு வந்து விடும் '' என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|