Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பல் 28 இந்திய ஊழியர்களுடன் ஈரானுக்கு கடத்தல்

டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பல் 28 இந்திய ஊழியர்களுடன் ஈரானுக்கு கடத்தல்

By: Karunakaran Thu, 16 July 2020 6:32:25 PM

டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பல் 28 இந்திய ஊழியர்களுடன் ஈரானுக்கு கடத்தல்

சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெய் போக்குவரத்து மையமாக அமீரகம் உள்ளது. பல்வேறு மேற்கத்திய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் கடல் வழிப்பாதையில் அமீரகம் முக்கிய சந்திப்பாக உள்ளதால், அங்கு பல்வேறு துறைமுகங்களில் எண்ணெய் கப்பல்கள் பல நாடுகளில் இருந்து வந்து செல்கிறது.

இந்நிலையில் கடந்த 5-ந் தேதி சார்ஜா கோர்ப்பக்கான் துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டு இருந்த டோமினிக்கா நாட்டு கப்பல் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. டோமினிக்கா நாட்டின் ‘எம்.டி கல்ப் ஸ்கை’ என்ற எண்ணெய் கப்பல் அமீரகம் வழியாக செல்ல அனுமதி கோரிய நிலையில், ஈரான் எல்லையில் நிலவும் அசாதாரண நிலை மற்றும் அமீரக கடற்படை தடை சட்டத்தின்படி கப்பல் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

iran,dominica,oil tanker,hijack ,ஈரான், டொமினிகா, எண்ணெய் டேங்கர், கடத்தல்

சர்வதேச விதிமுறைகளை மீறியதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தும், அமீரக கடல் பரப்பில் அந்த கப்பல் வந்துள்ளது. இதனால் அந்த கப்பல் பாதுகாப்பு காரணங்களுக்காக அமீரகம் கோர்பக்கான் துறைமுகத்தில் கடந்த 4 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ந் தேதி இந்தியா நோக்கி கப்பல் திரும்ப இருந்த நிலையில், திடீரென்று எந்தவிதமான சிக்னலும் கிடைக்காமல் கப்பல் மாயமாக மறைந்ததால் இதுகுறித்து கடல் சார் மனிதவள மேம்பாட்டு அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரான் நாட்டின் ஹார்முஸ் தீவு அருகே அந்த கப்பல் செல்வது தெரிய வந்துள்ளது. தற்போது அதில் கப்பல் கேப்டன் ஜோகிந்தர் சிங் உள்ளிட்ட 28 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அதன்பின், அந்த கப்பல் கேப்டனை தொடர்பு கொண்ட போது, கப்பல் கடத்தப்பட்டதையும், ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் 26 கப்பல் ஊழியர்கள் பத்திரமாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடத்தப்பட்ட கப்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
|