Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி நாளை எடியூரப்பா ஆய்வு

கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி நாளை எடியூரப்பா ஆய்வு

By: Karunakaran Mon, 24 Aug 2020 1:41:06 PM

கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி நாளை எடியூரப்பா ஆய்வு

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பருவமழை தீவிரம் அடைந்து வந்ததால், கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் 5,500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் நாசமாகி உள்ளது.

இந்த கனமழை காரணமாக இதுவரை மொத்தம் 19 பேர் பலியாகி உள்ளனர். 104 நிவாரண முகாம்களில் சுமார் 3 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

eduyurappa,rain-hit area,karnataka,helicopter ,எடியூரப்பா, மழை பெய்த பகுதி, கர்நாடகா, ஹெலிகாப்டர்

தற்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். நாளை முதல்-மந்திரி எடியூரப்பா மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சாம்ரா விமான நிலையத்தில் வைத்தே பெலகாவி மற்றும் தார்வார் மாவட்ட பொறுப்பு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்பு மதியம் 12.45 மணியளவில் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அலமட்டி அணைக்கட்டுக்கு சென்று வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தி பாகினா சமர்ப்பணம் செய்கிறார்.எடியூரப்பாவுடன், வருவாய்த்துறை மந்திரி அசோக்கும் மழை பாதித்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், முதல்-மந்திரி நேரில் பார்வையிடவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது

Tags :