Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கத்தரிக்காய் 2 மடங்கு விலை உயர்வு... ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை!

கத்தரிக்காய் 2 மடங்கு விலை உயர்வு... ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை!

By: Monisha Mon, 30 Nov 2020 09:17:43 AM

கத்தரிக்காய் 2 மடங்கு விலை உயர்வு... ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை!

புதுவை கிராமப்புறங்களில் பயிர் செய்திருந்த காய்கறி செடிகள் நிவர் புயல் காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து புதுவைக்கு காய்கறிகள் வருகின்றனர். தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலைஉயர்ந்துள்ளது.

நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு புதுவையில் நேற்று பெரும்பாலான இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. இதே போல் மீன் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் நேற்று காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

eggplant,price,sale,nivar storm,sale ,கத்தரிக்காய்,விலை,விற்பனை,நிவர் புயல்,விற்பனை

அதன் கிலோ விவரம் வருமாறு:- வெங்காயம்- ரூ.80, தக்காளி ரூ.30, கத்தரிக்காய் ரூ.100, உருளைக்கிழங்கு ரூ.60, பீன்ஸ் ரூ.24, கேரட் - ரூ.55, பீட்ரூட் - ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழை இழையின் விலையும் அதிகமாக இருந்தது. இப்படி காய்கறிகள் அதிக விலை வைத்து விற்கப்பட்ட போதிலும் வேறு வழியின்றி பொதுமக்கள் வாங்கிச் சென்றதை காண முடிந்தது. இதில் கத்தரிக்காய் மட்டும் 2 மடங்கு அதிகம் விலை வைத்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், "நிவர் புயல் காரணமாக மழை அதிகமாக பெய்ததால் இங்குள்ள காய்கறிகள் சேதம் அடைந்துள்ளன. வெளிமாநிலத்தில் இருந்து தான் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழாவால் விலை குறையவில்லை. இன்னும் ஓரிரு நாட்களுக்கு பின்னர் விலை குறையும்" என்றார்.

Tags :
|
|