Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம் ரூ.60க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம் ரூ.60க்கு விற்பனை

By: Nagaraj Thu, 22 Oct 2020 12:27:45 PM

கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம் ரூ.60க்கு விற்பனை

இறக்குமதியானது எகிப்து வெங்காயம்... சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு வெளிமாநிலங்களிருந்து தான் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணாமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் கதக், ஹூப்ளி, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

egypt onion,traders,chennai,sales,yield ,எகிப்து வெங்காயம், வியாபாரிகள், சென்னை, விற்பனை, விளைச்சல்

ஆனால் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கனமழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையில் வெங்காய விலை ரூ.110 ஐ எட்டியது. இதையடுத்து மக்கள் நலனை கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ. 45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயத்தை வரவழைத்து, குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர் வியாபாரிகள். எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

Tags :
|