Advertisement

நவம்பர் மாதம் எட்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

By: Nagaraj Wed, 28 Oct 2020 7:46:46 PM

நவம்பர் மாதம் எட்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

வங்கிகள் விடுமுறை... பண்டிகைகள் தொடர்ந்து வர இருப்பதால் அடுத்த மாதம், அதாவது நவம்பரில் எட்டு நாட்கள் வங்கிகள் மூடியிருக்கும். அதனால் மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டு கொள்வது அவசியம்.

தீபாவளி, குருநானக் ஜெயந்தி, சனிக்கிழை, ஞாயிற்றுக்கிழமை என 8 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளன. அதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் திட்டமிட்டு கொள்வது அவசியம்.

குறிப்பாக தீபாவளி, குருநானக் ஜெயந்தி ஆகிய இரண்டு பண்டிகைகளும் நவம்பர் மாதத்தில் வர இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பண்டிகைகள் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், 22 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என தெரிகிறது.

banks,holidays,public,saturday,guru nanak jayanti ,வங்கிகள், விடுமுறை, பொதுமக்கள், சனிக்கிழமை, குருநானக் ஜெயந்தி

நவம்பர் 1, 8,15,22, 29 ஆகிய நான்கு நாட்களும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை. நவம்பர் 14 தீபாவளி, நவம்பர் 28 நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் திறக்கப்படாது.

நவம்பர் 30ஆம் தேதி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் அடுத்த மாதம் மொத்தமாக 8 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் சரியாக திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.

Tags :
|
|