Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

By: Monisha Thu, 03 Dec 2020 3:06:18 PM

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும் இது தொடர்பாக டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்போவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

rajinikanth,party,aiadmk,minister,impact ,ரஜினிகாந்த்,கட்சி,அதிமுக,அமைச்சர்,பாதிப்பு

இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:- ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க. வின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஊழல் என்று ரஜினிகாந்த் கூறுவது தி.மு.க. கட்சியைத்தான்; கட்சி ஆரம்பிப்பது அவரவர் உரிமை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|