Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு திட்டமிட்டபடி இன்று தேர்வு

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு திட்டமிட்டபடி இன்று தேர்வு

By: Nagaraj Mon, 21 Sept 2020 09:59:22 AM

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு திட்டமிட்டபடி இன்று தேர்வு

தனித் தேர்வர்களுக்கு திட்டமிட்டபடி இன்று தேர்வு நடக்கிறது.

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரலில் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தனித்தேர்வர்களுக்கு இன்று செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய செய்து தனித்தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

individual,today,court,government of tamil nadu,class x ,தனித்தேர்வர், இன்று, நீதிமன்றம், தமிழக அரசு, பத்தாம் வகுப்பு

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் மாணவர்கள் யாருக்கும் தொற்று இல்லை எனவும் அரசுத்தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிமன்றம் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குகான தேர்வுக்கு தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு நடத்திய விதம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் இன்று திட்டமிட்டப்படி பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்குக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

Tags :
|
|