Advertisement

சிம்லாவில் விளையும் விலை உயர்ந்த குச்சி காளான்கள்

By: Nagaraj Sat, 26 Dec 2020 3:20:38 PM

சிம்லாவில் விளையும் விலை உயர்ந்த குச்சி காளான்கள்

சிம்லாவில் விளையும் குச்சி காளான்கள்தான் விலை உயர்ந்த காய்கறி என்றால் மிகையில்லை.

பொதுவாக விலை உயர்ந்த பொருள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் வரை தான் அதற்கு மார்க்கெட் இருக்கும். அங்க போய் தோண்டி பாரு தங்கம் இருக்குன்னு சொன்னா, ஊரே படையெடுத்து வரும்.

அந்த மாதிரி தான், சிம்லாவில் விளையும் குச்சி காளான்கள். ஒரு கிலோ காளான் உங்க கையில் கிடைத்தால், மினிமம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க ஆள் இருக்காங்க. ஒரு கிலோ 30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். இது பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லை என்பதால், இன்னும் சுரண்டி எடுக்காம இருக்காங்க. இந்த காளான் விளையும் இடம் எல்லாம் நாசமாகிவிடும்.

stick mushrooms,shimla,farmers,high price,short duration ,குச்சி காளான், சிம்லா, விவசாயிகள், அதிக விலை, குறுகிய காலம்

பெரும்பாலும் ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பா, குல்லு, சிம்லா, மனாலி ஆகிய மாவட்டங்களில் உள்ள காடுகளில் விளைகிறது. அடர்த்தியான காட்டுக்கு நடுவில் வளரும். நம்ம ஊரு வெப்ப நிலையில் இதனை வளர்க்க முடியாது. 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மட்டுமே வளரக்கூடியவை. சராசரியாக 2 முதல் 7 செ.மீ அகலமும், 2 - 10 செ.மீ நீளத்திற்கும் வளரும்.

உடலில் பல்வேறு நோய்களை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் மிகுந்த அளவில் நிறைந்துள்ளதால், தனி மதிப்பு இருக்கு. விலங்கு வேட்டைக்கு போவது போல, பிப்ரவரி மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை ஹிமாச்சல் பிரதேச விவசாயிகள் குச்சி காளான் வேட்டைக்கு செல்கின்றனர்.

ஊரில் வருடம் முழுவதும் ஈட்டும் வருமானத்தை, குறுகிய காலத்தில் காளான் வேட்டையில் சம்பாரித்துவிடுகின்றனர். இது பணம் காய்க்கும் மரம் என்பதால், காளான் வேட்டைக்கு போகும் இரகசியத்தை யாருக்கும் சொல்வதில்லை.

Tags :
|