Advertisement

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க பரிசோதனை தீவிரம்

By: Monisha Mon, 23 Nov 2020 09:52:11 AM

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க பரிசோதனை தீவிரம்

சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் கொரோனா சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

corona,test,camp,tourism,border ,கொரோனா,பரிசோதனை,முகாம்,சுற்றுலா,எல்லை

நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|