Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றாலம் பகுதிகள் மற்றும் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

குற்றாலம் பகுதிகள் மற்றும் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

By: Nagaraj Tue, 22 Sept 2020 9:27:39 PM

குற்றாலம் பகுதிகள் மற்றும் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லவும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல்குளம், சுற்றுலா தளங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

prohibition,courtallam,tourist site,travelers,waterfall ,தடை விதிப்பு, குற்றாலம், சுற்றுலா தலம், பயணிகள், அருவி

இந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலம் இடமான குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைலுக்கு செல்லவும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :