Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கால்நடை மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

கால்நடை மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

By: Nagaraj Tue, 06 Oct 2020 3:34:12 PM

கால்நடை மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

கால்நடை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை... தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். இந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பிவிஎஸ்சி மற்றும் பி.டெக் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வருடத்திற்கான சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

students,veterinary medicine,application,extension ,மாணவர்கள், கால்நடை மருத்துவம், விண்ணப்பம், நீட்டிப்பு

கடைசி தேதியாக செப்டம்பர் 28 என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் தேதி அக்டோபர் 9ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

என்ஆர்ஐ மாணவர்கள் அக்டோபர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :