Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பண்டிகை நாட்களை முன்னிட்டு மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

பண்டிகை நாட்களை முன்னிட்டு மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

By: Monisha Fri, 23 Oct 2020 09:30:41 AM

பண்டிகை நாட்களை முன்னிட்டு மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னையில் பண்டிகை நாட்கள் வருவதையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை நாட்கள் வருவதையொட்டி சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு பதிலாக அதிகாலை 5½ மணியில் இருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.

festival,metro train,chennai ,பண்டிகை,மெட்ரோ ரெயில்,சென்னை

அதேபோல் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு பதிலாக அதிகாலை 5½ மணியில் இருந்து இரவு 9 மணி வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :