Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெல்பேர்னில் கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

மெல்பேர்னில் கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

By: Nagaraj Sun, 06 Sept 2020 6:58:38 PM

மெல்பேர்னில் கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

ஆஸ்திரேலிய நகரமான மெல்பேர்னில் கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுகள் போதுமான அளவு குறையவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று கூறினார்.

நடவடிக்கைகளை படிப்படியாக தளர்த்துவது ஒக்டோபர் முதல் செயற்படுத்தப்படும். நாட்டின் இரண்டாவது தொற்று அலையின் மையமாக இந்த மாநிலம் திகழ்கிறது. இது ஆஸ்திரேலியாவின் 753 உயிரிழப்புகளில் 90 சதவீதம் ஆகும். ஆஸ்திரேலியாவில் 25 மில்லியன் மக்கள் தொகையில் மொத்தம் 26,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

extension,2 week,melbourne,paralysis,restrictions ,நீட்டிப்பு, 2 வாரம், மெல்போர்ன், முடக்க நிலை, கட்டுப்பாடுகள்

கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்த பின்னர் மெல்பேர்ன் பகுதி ஜூலை 9ஆம் திகதி இரண்டாவது முடக்கநிலை கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் போது 5 கி.மீ (3 மைல்) பயண வரம்பு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

தற்போதைய நான்காவது நிலை முடக்க நிலை கட்டுப்பாடுகள் முதலில் செப்டம்பர் 13ஆம் திகதி முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|