Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடல்நலக்குறைவால் பிரபல பாடகர் வாஜித் கான் இன்று காலமானார்

உடல்நலக்குறைவால் பிரபல பாடகர் வாஜித் கான் இன்று காலமானார்

By: Nagaraj Mon, 01 June 2020 10:04:36 AM

உடல்நலக்குறைவால் பிரபல பாடகர் வாஜித் கான் இன்று காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக இளம் வயதிலேயே பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் (42) காலமானார். இது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாடகர் வாஜித்கான் உடல்நிலை குறைவு காரணமாக மும்பையில் உள்ள செம்பூரின் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை காலமானார். இவர் காலமான செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:

died,composer,bollywood,celebrity ,காலமானார், இசையமைப்பாளர், பாலிவுட், பிரபலம்

''அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்தது. சிறிது நாட்களுக்கு முன்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது பற்றி தெரிய வந்தது. கடந்த நான்கு நாட்களாக வென்டிலேட்டரில் இருந்த அவரது நிலைமை மோசமடையத் தொடங்கியது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை காலமானார்'' என தெரிவித்துள்ளார்.

வாஜித் கான் மறைவுக்கு பிரபல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|