Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜியோ செல் டவர்களை சேதமாக்கிய விவசாயிகள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஜியோ செல் டவர்களை சேதமாக்கிய விவசாயிகள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

By: Nagaraj Tue, 29 Dec 2020 10:03:04 PM

ஜியோ செல் டவர்களை சேதமாக்கிய விவசாயிகள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஜியோ செல் டவர்களை சேதமாக்கிய விவசாயிகள்...மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் விவசாயிகள் ஜியோ செல் டவர்களை நாசமாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

punjab,jio cell,towers,damage,farmers ,பஞ்சாப், ஜியோ செல், டவர்கள், சேதம், விவசாயிகள்

இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே அரசு இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் இடையே பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், பொருட்களை கண்டால் துவம்சம் செய்து விடுகின்றனர்.

இதனால் பஞ்சாபில் இதுவரை 1,561 ஜியோ செல்போன் டவர்களை விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளதாகவும், ஜியோ நிறுவன ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து செல்போன் டவர்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|
|
|