Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் சாலையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களை நிறுத்திய விவசாயிகள்

ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் சாலையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களை நிறுத்திய விவசாயிகள்

By: Karunakaran Sun, 13 Dec 2020 2:01:32 PM

ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் சாலையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களை நிறுத்திய விவசாயிகள்

டெல்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் இன்று 18-வது நாளாக நடந்து வருகிறது. இதுவரை மத்திய அரசுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி உள்ளனர். அவர்கள் டெல்லியில் ஏற்கனவே 4 முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு இருந்தனர். இந்நிலையில் ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் சாலையை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.

ஆயிரக்கணக்கான டிராக்டர்களை அந்த சாலையில் கொண்டு வந்து நிறுத்தியதால்போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த சாலை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாகும். நேற்று விவசாயிகள் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் நாடு முழுவதும் 165 டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன.

farmers,thousands of tractors,agra,delhi ,விவசாயிகள், ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், ஆக்ரா, டெல்லி

பாரதீய விவசாய சங்கத்தின் தலைவர் குர்மீத்சிங் 19-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். முதலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போராட்டத்தில் இப்போது பெண்களும் அதிகளவில் பங்கேற்று வருகிறார்கள். 15-ந் தேதி முதல் இன்னும் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் வேளாண்மை கடன் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பெண்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை விவசாய சங்கத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியானா விவசாயிகள் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரியானா விவசாய சங்கங்களை சேர்ந்த பல பிரதிநிதிகள் நேற்று விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து பேசி ஒரு மனுவை அவரிடம் கொடுத்தனர். அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள், விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கின்றன. எனவே இந்த சட்டங்களை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

Tags :
|