Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரத்தத்தில் கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பிய விவசாயிகள்

ரத்தத்தில் கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பிய விவசாயிகள்

By: Nagaraj Tue, 22 Dec 2020 4:05:05 PM

ரத்தத்தில் கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பிய விவசாயிகள்

ரத்தக்கடிதம் அனுப்பிய விவசாயிகள்... டெல்லியின் சிங்கு எல்லையில் 27வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களாகும். விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கக்கூடிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்த ரத்தத்தால் எழுதப்பட்ட மனுவில் கூறியிருக்கிறார்கள்.

இது எங்களுடைய ரத்தம். எங்கள் உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப்பெரிய பாவம். விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பிரதமராகிய நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஒருவருடைய உரிமையை மற்றவர் பறிக்கக்கூடாது என்று குருநானக் கூறியிருக்கிறார்.

குருத்வாராவில் போய் பிரார்த்தனை நடத்திய உங்களுக்கு அது ஏன் தெரியாமல் போய்விட்டது..? என்று ரத்தத்தால் எழுதிய அந்த மனுவில் விவசாயிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

farmers struggle,delhi,bloodletting,prime minister ,விவசாயிகள் போராட்டம், டெல்லி, ரத்தக்கடிதம், பிரதமர்

இதனிடையே இன்று இரண்டாம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பேச்சு வார்த்தையை மீண்டும் விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இதுவரை நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை தான் மீண்டும் அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. புதிதாக அவர்கள் எதையும் கூறவில்லை. நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அரசு நினைத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவு செய்து கடிதம் எழுதியிருப்பார்கள். அந்த எண்ணம் அரசுக்கு இல்லை என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளன.

எனவே, இன்று அது குறித்து ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு பதில் கடிதம் அனுப்ப விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு அனைத்து பெயர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பதே தங்களது திட்டவட்டமான கோரிக்கை என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே, சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 65 வயதான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் சிங் என்பவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்துள்ள அவரைக் கவனித்த மற்ற விவசாயிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதேபோல, கடந்த 20 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி விட்டு உடல்நலக்குறைவால் சொந்த ஊர் திரும்பிய பஞ்சாப் மாநில விவசாயி ஹசாம் சிங் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு 34 ஆக உயர்ந்திருக்கிறது.

Tags :
|