Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்கள் மெல்ல கொல்லும் விஷம் - காங்கிரஸ் கட்சி

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்கள் மெல்ல கொல்லும் விஷம் - காங்கிரஸ் கட்சி

By: Karunakaran Mon, 28 Sept 2020 4:20:47 PM

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்கள் மெல்ல கொல்லும் விஷம் - காங்கிரஸ் கட்சி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்நிலையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கரும் காணொலி காட்சி வழியாக நேற்று பேட்டி அளித்தபோது, அனைத்து கட்சிகளும் வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். இவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இவை பெரிய வணிகர்களுக்கு விவசாயிகளை அடிமைகள் ஆக்கி விடும் என்று கூறினர்.

federal government,agriculture bills,poison,congress party ,மத்திய அரசு, விவசாய மசோதாக்கள், விஷம், காங்கிரஸ் கட்சி

மேலும் அவர்கள், இந்த மசோதாக்கள் புற்றுநோய் போன்றவை. இவை மெல்ல கொல்லும் விஷம். இது விவசாயிகளையும், விவசாயத்தையும் கொன்று விடும் என்று தெரிவித்தனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கூறுகையில், இந்த மசோதாக்களால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறி இருக்கிறது என்றால் அது தானாக நடந்ததல்ல. விவசாயிகள்தான் இதை செய்ய வைத்துள்ளனர் என்று கூறினார்.

அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா கூறுகையில், அரியானாவில் பா.ஜ.க.வுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஜனநாயக ஜனதா கட்சி (துஷ்யந்த் சவுதாலா கட்சி), அந்த கூட்டணியில் இருந்து விலகி விவசாயிகளுடன் நிற்க துணிவிருக்கிறதா?. துஷ்யந்த் சவுதாலா தனது கண்களை திறந்து கொண்டு, விவசாயிகளுடன் நிற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
|