Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

By: Karunakaran Sat, 10 Oct 2020 4:47:55 PM

பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு எதிர்க்கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

federal government,stern action,sexual assault,womens ,மத்திய அரசு, கடுமையான நடவடிக்கை, பாலியல் வன்கொடுமை, பெண்கள்

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தலில், கிரிமினல் சட்ட நடைமுறையில் குறைபாடு கண்டறியப்பட்டால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய எல்லைக்கு உட்படாத பகுதியில் நடந்த குற்றங்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், வாரண்ட் இல்லாமல் கைது செய்து நேரடியாக விசாரிக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பாக உரிய நேரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தவறும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :