Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு

சீனாவின் மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு

By: Nagaraj Mon, 27 July 2020 4:18:39 PM

சீனாவின் மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு

சீனாவின் மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை... டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தொடர்ந்து மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாகவும், சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துக் கொண்டே வந்தது.

47 processor,prohibition,federal government,ladakh,kalwan ,47 செயலி, தடை, மத்திய அரசு, லடாக், கல்வான்

அந்த வகையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், மத்திய அரசு கடந்த ஜூன் மாதம், 29-ம் தேதி தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, டிக்டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, மேலும் 47 செயலிகளை தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவை என்னென்ன செயலிகள் என்பது குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|