Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

By: Monisha Fri, 13 Nov 2020 3:48:42 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கோவை பூ மார்க்கெட்டில் 100-க்கும் அதிகமான பூக்கள் கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது இந்த கடைகள் அனைத்தும் தற்காலிகமாக புருக்பாண்ட் பீல்ட் ரோட்டில் உள்ள தேவாங்கர் அரசு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், மதுரை, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லி, முல்லை, ஜாதி மல்லி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் வருகின்றன. தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் பூ மார்க்கெட்டில் அதிகமாக மக்கள் திரண்டு பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

diwali,flowers,prices,festivals,markets ,தீபாவளி,பூக்கள்,விலை,பண்டிகை,மார்க்கெட்

தீபாவளி என்பதால் பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது. கோவை பூ மார்க்கெட்டில் விற்கப்படும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:- செவ்வந்தி பூ மற்றும் வயலட் செவ்வந்தி ரூ.320க்கும், கோழிகொண்டை பூ- ரூ.80-க்கும் விற்பனையாகிறது. அரளி பூ ரூ.200-க்கும், மல்லி-1,500 ரூபாய்க்கும், முல்லை பூ-1200 ரூபாய்க்கும், ஜாதிமல்லி- 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

1 தாமரை பூ 40 ரூபாய்க்கும், செண்டுமல்லி 200 ரூபாய்க்கும், ரோஜா 400 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரம் மல்லி கிலோ ரூ.400-க்கு விற்பனையாகி வந்துள்ளது. ஆனால் தற்போது மல்லி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Tags :
|
|