Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி சந்தித்த புளூரல்ஸ் கட்சி தலைவி

டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி சந்தித்த புளூரல்ஸ் கட்சி தலைவி

By: Nagaraj Thu, 12 Nov 2020 09:26:41 AM

டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி சந்தித்த புளூரல்ஸ் கட்சி தலைவி

படுதோல்வியை சந்தித்த புளூரல்ஸ் கட்சி... பீகாரில் முன்னாள் எம்எல்ஏ வினோத் சவுத்ரியின் மகள் புஷ்பம் பிரியா தொடங்கிய புளூரல்ஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

லண்டனில் படித்து விட்டு திரும்பிய புஷ்பம் பிரியா சவுத்ரி (28) புளூரல்ஸ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, பீகார் தேர்தலில் போட்டியிட்டார். தனது கட்சி சார்பில் டாக்டர், இன்ஜினியர், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை களமிறக்கினார்.

election,bihar,deposit,bad defeat,florals party ,தேர்தல், பீகார், டெபாசிட், படு தோல்வி, புளூரல்ஸ் கட்சி

கட்சியின் முதல்வர் வேட்பாளராக தன்னையே அறிவித்து பிரசாரத்தில் குதித்த அவர், 2030க்குள் பீகாரை ஐரோப்பா ஆக்கிக் காட்டுவேன் என உறுதி அளித்தார். ஆனால், அவருக்கு பீகார் மக்கள் படுதோல்வியை பரிசாக தந்துள்ளனர். பாட்னாவில் உள்ள பாங்கிபூர் மற்றும் மதுபனி மாவட்டத்தில் பிஸ்பி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட புஷ்பாவுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
பிஸ்பி தொகுதியில் நோட்டாவை விட குறைவான வாக்கு பெற்றார்.

இதனால் வாக்கு எண்ணிக்கையின் போதே , மின்னணு வாக்கு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு விட்டது என அவர் போட்ட டிவீட்டிற்கு தேர்தல் ஆணையம் அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தது.

Tags :
|