Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை

By: Monisha Wed, 02 Sept 2020 1:20:26 PM

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா கோவில் திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல விழா முடியும்வரை தங்கும் விடுதிகளை திறக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா கோவில் திருவிழாவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் 8-ந் தேதி திருவிழா முடியும் வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

velankanni,madha kovil,festival,devotees,collector praveen nair ,வேளாங்கண்ணி,மாதா கோவில்,திருவிழா,பக்தர்கள்,கலெக்டர் பிரவீன்நாயர்

வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) அன்று நடைபெறும் தேர் பவனி மற்றும் மறுநாள் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும் கொடி இறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் போதகர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். திருவிழா முடியும் வரை தங்கும் விடுதிகளை திறக்கவும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழாவாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பங்கேற்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த வெளியூர், வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags :