Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முப்பது வருட சிறைவாசம் முடிந்து திரும்பிய மாஜி கடற்படை ஆய்வாளர்

முப்பது வருட சிறைவாசம் முடிந்து திரும்பிய மாஜி கடற்படை ஆய்வாளர்

By: Nagaraj Thu, 31 Dec 2020 6:09:37 PM

முப்பது வருட சிறைவாசம் முடிந்து திரும்பிய மாஜி கடற்படை ஆய்வாளர்

30 வருட சிறைவாசம்... அமெரிக்காவின் முன்னாள் கடற்படை ஆய்வாளர் 30 வருட சிறைவாசத்தினை முடித்து மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளார்.

இஸ்ரேலின் உளவாளியாக செயற்பட்ட குற்றத்திற்காக அமெரிக்காவினால் சிறைப்பிடிக்கப்பட்ட 66 வயதான ஜொனாத்தன் பொலார்ட் (Jonathan Pollard), ஏறக்குறைய 30 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பலராலும் குரல் எழுப்பப்பட்டது.

israel,pollard,imprisonment,homeland,happiness ,
இஸ்ரேல், பொலார்ட், சிறைவாசம், தாய்நாட்டில், மகிழ்ச்சி

கடந்த 1987ம் ஆண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று இஸ்ரேலை வந்தடைந்துள்ளார். பொலார்டின் விடுதலைக்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாட்டை வந்தடைந்த பொலார்ட் மண்ணை முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நீங்கள் தற்போது உங்களது தாய்நாட்டில் இருக்கிறீர்கள். நீங்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களது வாழ்க்கையினை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பொலார்டுடன், அவரது மனைவியும் இஸ்ரேலை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|