Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா மருந்தை எடுத்துக்கொள்ள முன்னாள் அதிபர்கள் ஆர்வம்

கொரோனா மருந்தை எடுத்துக்கொள்ள முன்னாள் அதிபர்கள் ஆர்வம்

By: Nagaraj Fri, 04 Dec 2020 6:32:00 PM

கொரோனா மருந்தை எடுத்துக்கொள்ள முன்னாள் அதிபர்கள் ஆர்வம்

அமெரிக்காவில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பல முன்னணி கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வருகின்றன. தற்போது வரை இந்த தடுப்பு 90% வெற்றிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் இந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பிக்க இருப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தின் உரிய அனுமதி கிடைத்த பிறகு இந்த தடுப்பு மருந்து படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்பட இருக்கிறது.அதே சமயம் தடுப்பு மருந்துக்கு எதிரான பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வது பற்றி அவநம்பிக்கை நிலவுவதாக சொல்லப்படுகிறது.

corona,vaccine,hope,planned ,கொரோனா, தடுப்பு மருந்து, நம்பிக்கை, திட்டமிட்டுள்ளனர்

எனவே மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்து நம்பிக்கையை ஏற்படுத்த பிரபலங்களின் உதவியை நாட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பிரிட்டனில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்கான செய்தியை ராணி எலிசபெத் மூலம் மக்களுக்கு அறிவிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருகிறது. அதே போல் அமெரிக்காவில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை கேமராவுக்கு முன்பாக நேரடியாக செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள நம்பிக்கை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|