Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு

மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு

By: Monisha Mon, 14 Sept 2020 10:44:38 AM

மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 15,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 58 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 20 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது.

madurai,corona virus,infection,death,treatment ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்தநிலையில் மதுரையில் நேற்று 84 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 67 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 892 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதுபோல், மதுரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 72, 68 வயது மூதாட்டிகள், 55 வயது பெண், 85 வயது முதியவர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|