Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு

விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு

By: Karunakaran Tue, 08 Dec 2020 10:40:42 AM

விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் தீவிரமாக போராட்டத்தில் உள்ளனர்.

மத்திய அரசுடன் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற இருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர்.

full blockade,farmers,delhi struggle,agricultural laws ,முழு முற்றுகை, விவசாயிகள், டெல்ஹி போராட்டம், விவசாய சட்டங்கள்

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை வலுவாக நடத்திட முயற்சியெடுத்து வருகின்றன.

முழு அடைப்பையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்படுகின்றன. முழு அடைப்பு நடந்தாலும் ரெயில் போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றே தெரிகிறது. விவசாயிகள் இன்று அறிவித்திருக்கும் முழு அடைப்புக்கு எதிர்க்கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags :