Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்சில் வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிப்பு

பிரான்சில் வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிப்பு

By: Nagaraj Thu, 15 Oct 2020 7:59:22 PM

பிரான்சில் வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிப்பு

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பிரான்சில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவுவதால், வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது.

france,full curfew,announcement,corona,2nd wave ,பிரான்ஸ், முழு ஊரடங்கு, அறிவிப்பு, கொரோனா, 2வது அலை

அங்கு இதுவரை 7.79 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான், 4 வாரங்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வரும் 17ம் தேதி துவங்கி, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார்.

Tags :
|
|