Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது இடத்தில் விதிமுறைகள் படி விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி

பொது இடத்தில் விதிமுறைகள் படி விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி

By: Nagaraj Wed, 19 Aug 2020 10:01:24 AM

பொது இடத்தில் விதிமுறைகள் படி விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி

பக்தர்கள் மகிழ்ச்சி... பொது இடத்தில் பிள்ளையார் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாட கர்நாடக அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கட்டுப்படுகளுடன் அனுமதி அளித்துள்ளது கர்நாடக அரசு.

அதில் விதிமுறைகளை தளர்த்த கர்நாடக அரசு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிலைகளை வைக்க போடப்படும் பந்தல்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். பந்தல்களுக்குள் 20க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கக்கூடாது.

rule,ganesha chaturthi,procession,karnataka,permission ,விதிமுறை, விநாயகர் சதுர்த்தி, ஊர்வலம், கர்நாடகா, அனுமதி

அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4 அடிக்கும் மேல் உள்ள விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை கரைக்கும்போது ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியைக் பக்தர்கள் கொண்டாட வேண்டுமென கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags :
|